ஒஸ்லோ:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின். ஈரான் தொடர்பான நிலைப்பாடு, அவரது அரசியல் எதிர்காலம் குறித்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல அமெரிக்க அரசியல் விமர்சகரும் ஊடகப் பிரபலருமான “டக்கர் கார்ல்சன்”, டிரம்ப் ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததால், அது அவரது அரசியல் வாழ்க்கைக்கு முடிவுக்கட்டும் என கூறியுள்ளார்.
“அமெரிக்கா முதலில்” (America First) என்ற கொள்கையை முன்னிறுத்தி, வெளிநாட்டு போர்களில் அமெரிக்கா ஈடுபடக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த டிரம்ப், தற்போது ஈரான் தொடர்பாக எடுத்துள்ள நிலைப்பாடு, எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தி வருவதால், அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டக்கர் கார்ல்சனின் விமர்சனத்தை நிராகரித்துள்ள டிரம்ப், தனது முடிவுகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே எடுக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் டிரம்பின் அரசியல் செல்வாக்கை பாதித்து, அவரது அரசில் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்பது குறித்து தற்போது அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
27.06.2026






