முதியவரை தள்ளி விழுத்தி தொலைபேசி திருட்டு, முதியவர் மரணம், திருடர்கள் கைது!

முதியவரை தள்ளி விழுத்தி தொலைபேசி திருட்டு, முதியவர் மரணம், திருடர்கள் கைது!

பப்பாசி பழம் பறிபப்பதாக கூறி வீட்டுக்குள் நுழைந்தவர்கள் வீட்டிலிருந்த முதியவரை தள்ளி விழுத்தி தொலைபேசியை பறித்து சென்ற நிலையில் விழுந்து காயமடைந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரை 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்.நல்லுார் யமுனா ஏரி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றுக்கு சென்ற இருவர் பப்பாசிப்பழம் பறிக்கப்போவதாக கூறியிருக்கின்றனர்.

வீட்டின் உரிமையாளரான முதியவரும் அதற்கு அனுமதித்திருக்கின்றார்.

இதனையடுத்து வீட்டுக்குள் நுழைந்த இருவரும் முதியவரின் தொலைபேசியை தருமாறு கேட்டிருக்கின்றனர்.

எனினும் முதியவர் அதற்கு மறுக்கவே அவரை தள்ளி விழுத்திவிட்டு தொலைபேசியை பறித்து சென்றனர்.

பின்னர் அயலவர்கள் முதியவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில் முதியவரின் மரணத்திற்கு காரணமான இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடாத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளையடுத்து இன்று யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இருவரையும் அடுத்த மாதம் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments