முன்னணியில் இருந்து மணிவண்ணன் நீக்கம் புதியவர்கள் அறிவிப்பு!

முன்னணியில் இருந்து மணிவண்ணன் நீக்கம் புதியவர்கள் அறிவிப்பு!

சட்டத்தரணி வி.மணிவண்ணன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார். 

இன்று மாலை கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற மத்தியகுழு கூட்டத்தை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

இன்று தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

இந்த தீர்மானத்தை தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதன்படி மட்டக்களப்பை சேர்ந்த தர்மலிங்கம் சுரேஸ் என்பவர் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள