முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை காலமானார்!

You are currently viewing முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை காலமானார்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை நேற்று காலமானார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்த இவருக்கு, பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

நமது நீண்ட போராட்ட வரலாற்றில் தன்னை இணைத்து முழுமையாக போராடியவர்.
2009.ம் தமிழின யுத்தத்தின் பின். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தினை ராணுவ பிடியிலிருந்து மீட்பதற்கு கடுமையாக போராடியவர். அதன்பின் விசாரணைக்காக கொழும்புக்கு இரண்டு தடவை சென்று வந்தவர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியவர்.
கிளிநொச்சியில் உள்ள வரலாற்று பெருமைமிக்க சிவன் ஆலயம். சிறீலங்கா அரசாங்கத்தின் பௌத்தமயமாக்கும் திட்டத்தில் தொல்பொருள் எச்சங்கள் உள்ளதாக அகழ்வு பணிகள் தெரிவிக்கும்போது அதனை கடுமையாக அப்பகுதி மக்களோடு தடுத்து நிறுத்தியவர்.
இறுதி வரைக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் விலை போகாது மாவீரர்களது பாதையில் பயணித்துள்ள அற்புதமான மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments