முல்லைத்தீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை!

முல்லைத்தீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை!

முல்லைத்தீவு- மணற்குடியிருப்பு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற திருகோணமலையை சேர்ந்த 56 மற்றும் 35 வயதான இருவர் காணாமற்போயுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (19) குறித்த இரண்டு கடற்றொழிலாளர்களும் கடலுக்கு சென்றிருந்த நிலையில், மூன்று நாட்கள் ஆகியும் அவர்கள் கரைக்குத் திரும்பவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.

அவர்களைத் தேடும் பணிகளில் குறித்த பகுதி மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடற்றொழில் அமைச்சு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதியை சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments