முல்லைத்தீவில் இன்னும் முழுமையாக மிதிவெடிகள் அகற்றப்படவில்லை!

முல்லைத்தீவில் இன்னும் முழுமையாக மிதிவெடிகள் அகற்றப்படவில்லை!


முல்லைத்தீவு மாவட்டத்தில் போரின் போது புதைக்கப்பட்ட மிதிவெடிகள் இன்னும் முழுமையாக அகற்றப்படாத நிலையில் தற்போதும் அது தொடர்பான அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.போர் நடைபெற்று பத்து ஆண்டுகள் கடந்த நிலையிலம் இன்றும் வெடிபொருட்கள் மக்கள் வாழ் இடங்களில் காணப்படுகின்றன மிதிவெடி அகற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றும் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றது.

பிரித்தானியாவை மையமாகக் கொண்டு செயற்படுகின்ற ஹலோ ரெஸ் மனிதாபிமான மிதிவெடி அகற்றும் நிறுவனத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குமுளமுனை, தன்னிமுறிப்பு, கொக்குத்தொடுவாய் ஆகிய இடங்களில் புதிதாக மிதிவெடி அகற்றுதல் தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல் மாவட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் கடந்த 17.09.2020 அன்று நடைபெற்ற கலந்துரையாடலில்.
மிதிவெடி  அகற்றும் நிறுவனத்தின் கடந்த கால திட்டங்கள், செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக தெளிவூட்டப்பட்டுள்ளது.
ஹலோ ரெஸ் மனிதாபிமான மிதிவெடி அகற்றும் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் மற்றும் அதிகாரிகள், குறித்த துறையுடன் தொடர்புடைய இராணுவ பொலிஸ் அதிகாரிகள், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், சமூக மட்ட பிரதிநிதிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

பகிர்ந்துகொள்ள