முல்லைத்தீவில் இருந்து வவுனியாவிற்கான தனியார் போக்குவரத்து பணி புறக்கணிப்பு!

முல்லைத்தீவில் இருந்து வவுனியாவிற்கான தனியார் போக்குவரத்து பணி புறக்கணிப்பு!

முல்லைத்தீவு மற்றம் வவுனியா மாவட்டங்களுக்கிடையில் நிலவும் நேரகால அட்டவணை பிரச்சனை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் வவுனியா மாவட்டத்திற்கு  போக்குவரத்தினை புறக்கணித்துள்ளார்கள்.
இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கம் கருத்து தெரிவிக்கையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னால் வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரர் அவர்களால் போடப்பட்ட நேர அட்டவணை பிழை என வீதிப்பயணிகள் அதிகாரசபைக்கு எழுத்துமூலம் கொடுத்துள்ளோம்.
கொரோனா காலத்தில் பயணிகள் மிகவும் குறைவான நேரத்தில் புதிய நேர அட்டவணைப்படி சேவையினை மேற்கொள்ள சொல்லி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கொரோனா தொடர்பிலான கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முல்லைத்தீவு மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்திற்கு எதுவித அறிவித்தலும் வழஙக்கப்படவில்லை நேற்று (19.10.2020) முல்லைத்தீவு மாவட்டத்தின் பேருந்தினை வவுனியாவில்  6.10 மணிக்கு எடுக்கும் பேருந்தினை 5.40 மணிக்கு வவுனியா மாவட்ட நேரக்கணிப்பாளர் மாகாணசபை நேரக்கணிப்பாளர்,வவுனியா மாவட்ட தனியார் போக்குவரத்து சங்க தலைவர் இணைந்து பொலீசாரின் உதவியுடன் வவுனியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது 
இதற்கான நீதி கிடைக்கும் வரை முல்லைத்தீவு மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கம் சேவையினை இடைறுத்துகின்றதாக தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவில் இருந்து வவுனியா செல்லும் 17 பேருந்துக்களும், புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா செல்லும் 10 பேருந்துக்களுமாக 27 பேருந்துக்கள் 20.10.2020 இன்றில் இருந்து சேவையினை இடைநிறுத்தியுள்ளார்கள். 
மல்லாவியில் இருந்து வவுனியா செல்லும் பேருந்துக்கும் நேர ஒழுங்கு இல்லாத காரணத்தினால் முல்லைத்தீவில் இருந்து வவுனியா செல்லும் தனியார் பேருந்துக்கள் சேவையினை இடைநிறுத்தியுள்ளன.
இதற்கான தீர்வு விரைசில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பெற்றுத்ரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments