முல்லைத்தீவில் இருந்து 99 பேர் விடுவிப்பு!

முல்லைத்தீவில் இருந்து 99 பேர் விடுவிப்பு!

வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த ஒரு தொகுதி பேர் முல்லைத்தீவு படையினரின் தனிமைப்படுத்தல் முகாமில் 14 நாட்களை நிறைவு செய்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு கேப்பாபிலவு 59 ஆவது படையிரின் தனிமைப்படுத்தல் கண்காணிப்ப நிலையத்தில் மத்திய கிழக்கு நாட்டில் இருந்து வருகை தந்த 100 பேர் கடந்த 02.08.2020 அன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 99 பேர் இன்று தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப பட்டுள்ளனர்.தனிமைப்படுத்தலுக்கான சான்றிதழ்கள் படை அதிகாரிகளாலும் படை மருத்துவர்களினாலும் வழங்கிவைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஆறு பேருந்துக்களில் அவர்கள் வீPடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.
வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று கொரோனா காலத்தில் வேலையில்லாத நிலையில் நாட்டிற்கு திரும்பியவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதுடன் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த 256 பேர் கேப்பாபிலவு விமானப்படை தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலைத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments