முல்லைத்தீவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள் அனைத்திலும் படையினர் பாதுகாப்பு கடமையில்!

You are currently viewing முல்லைத்தீவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள் அனைத்திலும் படையினர் பாதுகாப்பு கடமையில்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதானைகள் இன்று நள்ளிரவு 11.30 தொடக்கம் இரவு ஆராதனைகளும் நாளை(25) காலை 6.00 மணிக்கு காலை ஆராதனையும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களிலும் துப்பாக்கி ஏந்திய படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளார்கள்
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் நகர் பகுதிகளிலும் படையினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் தொற்கு காரணமாக மக்கள் கூட்டங்களை தவிர்த்து எளிமையான முறையில் நத்தார் பண்டிகைகளை கொண்டாட கிறிஸ்தவ மதத்தலைவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டத்தினை தவிர்க்கும் முகமாகவும், கொவிட் 19 சுகாதார விதிமுறைகளை சரியான முறையில் மக்கள் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள