முல்லைத்தீவு, உடுப்புக்குளம் கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, இராணுவத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த நபர் ஒருவரை முல்லைத்தீவு சிறீலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை ஏப்ரல் 15 ஆம் திகதி சுமார் 17:30 மணியளவில், முல்லைத்தீவு – துண்டை, உடுப்புக்குளம் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வலை இழுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் சோதனையிட்டபோது, சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த டிராக்டருடன் குறித்த நபர் பிடிபட்டார்.
இவர் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு சிறீலங்கா இராணுவ சேவையிலிருந்து தப்பியோடியவர் (AWOL) எனத் தெரியவந்துள்ளது.
கடந்த ஒரு வருடமாகத் தலைமறைவாக இருந்த இவர், டிராக்டர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
சிறீலங்கா காவல்துறையினர் சுற்றிவளைத்த போது, அங்கிருந்த மற்றொரு நபர் தப்பியோடியுள்ளார்.
குறித்த நபர் சட்டவிரோத வலை இழுக்கும் தொழிலில் நேரடியாகத் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது






