முல்லைத்தீவில் பல பகுதிகளில் காத்திகை விளக்கீட்டினை தடுத்த படையினர் பொலீசார்!

முல்லைத்தீவில் பல பகுதிகளில் காத்திகை விளக்கீட்டினை தடுத்த படையினர் பொலீசார்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்து மக்களால் கொண்டாப்படும் கார்த்திகை விளக்கீடு மக்களின் வீடுகள் ஆலயங்களில் கொண்டப்பட்டுள்ளது.

இருப்பினும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களின் வீடுகளுக்கு சென்ற படையினர் பொலீசார் வீடுகளில் முன்னால் நிறுத்தப்பட்ட வாழைக்குற்றிகளை புடுங்கி எறிந்துள்ளதுடன் விளக்கீட்டு பந்தங்களையும் அகற்றி அட்டகாசம் புரிந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

விளக்கீடு கொழுத்தக்கூட தங்களுக்கு சுதந்திரம் இல்லைய எனமக்கள் முள்ளிவாய்க்கால் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்

மாவீரர் நாள் அன்றும் பீல்பைக் மோட்டார்சைக்கில்களில் துப்பாக்கி ஏந்திய படையினர் வீடுகளின் முன்னால் ஒழுங்கைகள் தோறும் பாரிய சத்தத்துடன் சுத்தி சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் முள்ளிவாய்க்கால் மக்களை அச்சுறுத்தும் விதமாகவே படையினர் பொலீசார் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை உடையார் கட்டு தெற்கு மற்றும் குரவில் பகுதியில் படையினரின் முகாம்களுக்கு அருகில் உள்ள மக்கள் கார்த்திகை விளக்கீட்டினை செய்யமுடியாத நிலையில் படையினர் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள