முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் 5 பேர் கைது!

You are currently viewing முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் 5 பேர் கைது!

முல்லைத்தீவு- கொக்கிளாய் பகுதி ஹரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(15) இடம்பெற்றுள்ளது.

கொக்கிளாய் வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவேளை கொக்குளாய் சிறீலங்கா பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களும் சான்று பொருட்களும் கொக்குளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும், சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கொக்குளாய் சிறீலங்கா பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply