முல்லைத்தீவில் மனித எச்சங்கள் நீதிபதி நேரில் ஆய்வு!

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் நீதிபதி நேரில் ஆய்வு!
சுதந்திரபுரம் பகுதியில் இனம்காணப்பட்ட மனித எச்சங்கள் 14 ஆம் திகதி மீட்கப்படும்! புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களை நேரில் பார்வையிட்ட நீதிபதி எதிர்வரும் 14 ஆம் திகதி தோண்டுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் தனியார் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது கடந்த 04.07.2020 அன்று மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறித்த காணியில் வீடு கட்டுவதற்கு காணியினை துப்பரவு செய்தவேளை மனித எலுப்பு எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த இடத்திற்கு பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில். இன்று(09.07.2020) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட,கிளிநொச்சி மாவட்ட சட்டவைத்திய அதிகாரிகள்,தடையவியல் பொலீசார் மற்றும் புதுக்குடியிருப்பு பொலீசார் ஆகியோர் முன்னிலையாகி சம்பவ இடத்தினை பார்வையிட்டுள்ளதுடன் இடம் குறித்து மேலும் தகவல்கள் திரட்டப்படவுள்ளதுடன் எதிர்வரும் 14 ஆம் திகதி அகள்வு பணிசெய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments