முல்லைத்தீவில் மரம் முறிந்து ஒருவர் பலி மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில்!

முல்லைத்தீவில் மரம் முறிந்து ஒருவர் பலி மற்றும் ஒருவர்  ஆபத்தான நிலையில்!


முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வீதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒரு இளைஞன் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் முல்லைத்தீவு நகரைஅண்டிய பகுதிகளில் 29.08.2020அன்று மாலை வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக உந்துருளி ஒன்றில் வீதியால் பயணித்தவர்கள் மேல், சிலாவத்தை பகுதியில் மரம் ஒன்றின் கிழை ஒன்று முறிந்த வீழ்ந்துள்ளது
 இதன்போது 33 அகவையுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான கொக்குத்தொடுவாய் மேற்கினை சேர்ந்த இ.ஜேம்சி விகேந்திரன் என்ற குடும்பஸ்தர் உயரிழந்துள்ளதுடன் நீராவிப்பிட்டியினை சேர்ந்த 21 அகவையுடைய எட்வேட் எமில்டன் என்ற இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments