முல்லைத்தீவில் மாவீரர் நாளினை நினைவிற்கொள்ள தடை!

முல்லைத்தீவில் மாவீரர் நாளினை நினைவிற்கொள்ள தடை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தினத்தினை நினைவிற்கொள்ள மாவட்ட நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட எல்லைக்குள் உட்பட்ட பிரதேங்களில் மாவீரர் நாளினை நினைவிற்கொள்வதை தடுக்கும் வகையில் உத்தரவிடுமாறு பிரதேச பொலீசாரால் இன்று(20.11.2020) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவிற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு பொலீஸ் பிரிவிற்குள் பகுதியில் 13 பேருக்கும் முள்ளியவளை பொலீஸ் பிரிவில் 11 பேருக்கும்,புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவில் 4 பேருக்கும் மற்றும் மல்லாவி,மாங்குளம் பொலீஸ் பிரிவு உள்ளடங்கலாக 35 பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments