முல்லைத்தீவில் மீனவர் படகு மோதல் ஒருவர் மருத்துவமனையில்!

முல்லைத்தீவில் மீனவர் படகு மோதல் ஒருவர் மருத்துவமனையில்!

முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கறுக்குப்பனையினை சேர்ந்த மீனவர்களின் படகு மீது கொக்குளாய் முகத்துவரப்பகுதியினை சேர்ந்த சிங்களவர்களின் மீன்பிடி படகு ஒன்று மோதித்தள்ளியதில் மீனவ படகு சேதமடைந்துள்ளதுடன் மீனவர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றுள்ளது.கறுக்குப்பனையினை சேர்ந்த மீனவர்கள் கடற்தொழிலுக்கு சென்றவேளை கொக்குளாய் முகத்துவார சிங்கள மீனவர்களின் படகு ஒன்று மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது இதன்போது படகு சேதமடைந்துள்ளதுடன் நாயாற்று பகுதியில் தொழில் செய்துவரும் தெற்கினை சேர்ந் மீனவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பில் நாயாற்று பகுதியில் தொழில்செய்துவரும் தெற்கினை சேர்ந்த பாதிக்கப்பட்ட மீனவர்கள் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments