முல்லைத்தீவில் 3 ஆவது நாளாக தொடரும் மீனவர்களின் போராட்டத்தில் மகளீர் அணியும் இணைவு!

முல்லைத்தீவில் 3 ஆவது நாளாக தொடரும் மீனவர்களின் போராட்டத்தில் மகளீர் அணியும் இணைவு!

இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறலை கண்டித்து முல்லைத்தீவு மாவட்டத்தில்  கடந்த 15 ஆம் திகதி தொடங்கிய போராட்டம் இன்று(17) 3ஆவது நாளாகவும தொடர்கின்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் பந்தல் அமைக்கப்பட்டு போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது தொடர் போராட்டத்தில் மீனவ குடும்பங்களின் மகளீர் அணியினரும் கலந்துகொண்டுள்ளார்கள்.
சுழற்சிமுறை போராட்டத்தில் இன்று மூன்றாவது நாள் போராட்டத்தில் நாயற்று கடற்தொழிலாளர்  சங்கமும்,முல்லைத்தீவு செல்வபுரம் பகுதி கடற்தொழில் சங்கத்தினரும் நாயாற்று பகுதி மாதர் அபிவிருத்தி சங்கத்தினரும்  இணைந்து கொண்டுள்ளார்கள்.
போராட்டத்தில் கலந்துகொண்ட மீனவ குடும்ப பெண் கருத்து தெரிவிக்கையில்..

மகளீர் இணைந்தது தமது கணவர்மார் தொழில் செய்து வந்தாலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்குத்தான் குடும்பத்தின் நிர்வாகத்தினை கொண்டு செல்ல முடியும் இந்த இழுவைபடகினால் பல குடும்பங்களின் நிலை மிகவும் கஸ்ரமான நிலை எதிர்வரும் சந்ததி தொழில் செய்யமுடியாத அளவிற்கு இழுவை படகுகள் அதிகரித்துள்ளன.
கரையோ பகுதிகளை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட மக்களை சந்திக்கவில்லை இன்று மூன்றாவது நாளாக போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றோம் தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்த மகளீர் நாங்கள் உங்களிடம் சோறு தாங்கள் என்று கேட்கவில்லை எங்கள் சாப்பாட்டில் மண் அள்ளிப்போடாதீர்கள் என்றுதான் கேட்கின்றோம்  என்றும் தெரிவித்துள்ளார்கள்

பகிர்ந்துகொள்ள