முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதிகளில் வணிக நிலையங்கள் பூட்டு!

You are currently viewing முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதிகளில் வணிக நிலையங்கள் பூட்டு!

மாவீரர் நாளான இன்று (27) முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் பொலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.வீதிகளில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வரும் வேளை வணிகர்கள் தங்கள் கடைகளை பூட்டியுள்ளார்கள்.இன்னிலையில் கடைகளை திறக்குமாறு பொலீசார் படையினர் வற்புறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு நகரில் பூட்டப்பட்ட கடைகளை கடை உரிமையாளர்களிடம் நேரடியாக செல்லும் படையினர் கடைகளை திறக்குமாறு பணித்துவருகின்றார்கள்.
புதுக்குடியிருப்பு நகர்பகதியிலும் பூட்டப்பட்டுள்ள கடைகளை திறக்குமாறு பொலீசார் படையினர் அறிவுத்து வருகின்றார்கள்.இதேவேளை வணிகர் சங்க தலைவர்கள் பொலீஸ் நிலையம் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.
பூட்டப்பட்டுள்ள கடைகளை திறக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் உணவகங்களை தவிர்ந்த ஏனைய கடைகள் முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பு நகரங்களில் பூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள