முல்லையில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பணத்தில் கூட்டமைப்பிற்கு பரப்புரை!

முல்லையில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பணத்தில் கூட்டமைப்பிற்கு பரப்புரை!

முல்லைத்லையில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பணத்தில் கூட்டமைப்பிற்கு பரப்புரை!

வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் முல்லைத்தீவு மாவட்டத்தில் செயற்படும் செயற்பாட்டாளர் ஒருவர் தமிழ்தேசியக கூட்டமைப்பினருக்கு மறைமுகமாக செயற்பட்டு வருவகின்றமை ஆதாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளராக செயற்பட்டுவரும் உதயன் என்பர் வெளிநாட்டில் உள்ள தமிழ்அமைப்புக்களிடம் இருந்து பெருமளவான பணத்தினை பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம் மற்றம் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

அந்தவகையில் இவரின் அபிவிருத்தி பணி தற்போது அரசியலினை இலக்காக கொண்டு செயற்பட்டு வருவதுடன் கூட்டமைப்பிற்கு ஆதரவான தேர்தல் பரப்புரைகளுக்கும் உதவிசெய்து வருகின்றமை தெரியவந்துள்ளது.
தமிழர்களின் தேசியம் உரிமை,போன்ற விடையங்களில் செயற்படும் மக்கள் பிரதிநிதிகள் கட்சிகள் வடக்கு கிழக்கில் இயங்கிவந்தாலும் கடந்த காலத்தில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மக்கள் விரக்த்தியான நிலை காணப்படுகின்றது.
இன்னிலையில் புதுக்குடியிருப்பில் கூட்டமைப்பின் ஆதரவாளர்காளல் உள்வாங்கப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் குறிப்பாக ரெலோ கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருவதுடன் அவர்களின் ஆதரவாளர்களுக்கே வாழ்வாதார உதவிகளை வழங்கிவருகின்றமை அறியக்கிடைத்துள்ளது.

இதனை புலம்பெயர் அமைப்புக்கள் கருத்தில் கொண்டு எந்த வேறுபாடுகள் இன்னியும் தேசியம் உரிமைக்காக உழைத்துவரும் செயற்பாட்டாளர்களுக்கும் மக்களுக்குமான உதவிகளை வழங்கவேண்டும் என தமிழர் உரிமைசார்ந்த உணர்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

3 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments