முள்ளிவாய்காலில் நடைபெற்ற உரிமை அரசியலுக்கான உறுதிப்பிரமானம்!

முள்ளிவாய்காலில் நடைபெற்ற உரிமை அரசியலுக்கான உறுதிப்பிரமானம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற அரசியல் பயணம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மண்ணிலிருந்து இன்றையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட முன்னணியின் அரசியல் தலைவர்கள் என தற்போது ஒன்றுகூடியுள்ளனர்.

தமிழ் மக்களுக்கான உரிமை அரசியலை வீழ்ந்த இடத்திலிருந்து நகர்த்திச்செல்ல இருப்பதோடு தமிழின அழிப்பிற்கு நீதிகேட்பதற்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுதியோடு செயலாற்றும் என்ற உறுதிப்பிரமானமும் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொத்துக்கொத்தாக எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உரிமை அரசியலுக்கான உறுதிப்பிரமாணம்.

Slået op af Tamil Murasam radio /தமிழ்முரசம்Fredag den 14. august 2020

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments