முள்ளிவாய்கால் தூபி சமதானத்தூபி ஆகிறது!

முள்ளிவாய்கால் தூபி சமதானத்தூபி ஆகிறது!

வட  தமிழீழம் , அழிக்கப்பட்ட நினைவுத்தூபியிருந்த இடத்தில் புதிய சமாதான தூபி அமைக்கப்படும் என யாழ்பல்கலைகழக துணைவேந்தர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு தன்னை குற்றமசாட்டுகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாலேயே அது அழிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டார்

இது தொடர்பில்   தெரிவித்துள்ளதாவது.

சிங்கள பேரினவாத அரசால் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூறுவதற்கான நினைவத்தூபி அதனை அழித்தமைக்கு எதிரான மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களின் பின்னர் மீண்டும் கட்டப்படவுள்ளது.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களிற்கான நினைவுத்தூபி கடந்த வாரம் யாழ்பல்கலைகழக நிர்வாகத்தால் அழிக்கப்பட்டது.

நினைவுத்தூபி நாட்டின் ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  ஆனால் சீற்றமடைந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களி;ல் ஈடுபட்டதுடன் அது தொடர்பில் உண்ணாவிரதப்போராட்டங்களில் ஈடுபட்டனர்.

நினைவுத்தூபி ஏன் அழிக்கப்பட்டது

அரசபடையினருக்கும் தமிழ் கிளர்ச்சியாளர்களிற்கும் இடையிலான 26 வருட உள்நாட்டு யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் சார்பாகவே இந்த நினைவுத்தூபி கட்டப்பட்டது.

2009 ம் ஆண்டு யுத்தத்தின் இறுதி தருணங்களின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தனர்.ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டதாக மதிப்பீடுகள் உள்ளன.

வெள்ளிக்கிழமை இந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டது. பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரசிங்க அந்த நினைவுத்தூபி சிங்களவர்களை பெரும்பான்மையினத்தவர்களாக கொண்ட இலங்கையின் தேசிய ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலானது என தெரிவித்தார்.

உயிரிழந்த பயங்கரவாதிகளை நினைவுகூறுவதற்கு எவருக்கும் அனுமதியில்லை என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்தார்.

நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் பல்கலைகழக வாயிலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் நினைவுத்தூபியை மீண்டும் உருவாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து சிலர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கை பல்கலைகழக மாணவர்களிற்கு எதிரான அவமரியாதை மாத்திரமல்ல முழு தமிழ் இனத்திற்கும் எதிரான நடவடிக்கை என யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.

நினைவுகூறுவதற்கு மக்களிற்குள்ள உரிமையை மறுக்கும் செயல் இதுஎனவும் அவர்கள் தெரிவித்தனர்.

யுத்தத்தில் உயிரிழந்த எங்;கள் நேசத்;திற்குரியவர்களை நினைவு கூறுவதற்கு எங்களிற்கு உரிமையுள்ளது என மாணவர் சங்க தலைவர் பாக்கியநாதன் உயந்தன் தெரிவித்தார்.இந்த மக்கள் எங்கள் தமிழ் சமூகத்திற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர் என குறிப்பிட்ட அவர்நினைவுத்தூபி அழிக்கப்பட்டமையால் நாங்கள் கடும் கவலையடைந்துள்ளோம்என தெரிவித்தார்.

இந்தியாவில் நினைவுத்தூபி இடிப்பிற்கு எதிர்ப்பு எழுந்தது.குறிப்பாக தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு உருவானது. கனடாவில் நினைவுத்தூபி இடிப்பிற்கு எதிராக கார்பேரணியொன்று இடம்பெற்றது.

இந்த நினைவுத்தூபி தற்போது மீள அதே இடத்திலேயே அமைக்கப்படவுள்ளது.

நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சந்தித்த துணைவேந்தர் எஸ் சிறீசற்குணராஜா கஞ்சிவழங்கி அவர்களின் போராட்டத்தினை முடித்துவைத்தார்.

அதே இடத்தில் புதிய சமாதான தூபி அமைக்கப்படும் என துணைவேந்தர் பிபிசிக்கு தெரிவித்தார். நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு தன்னை குற்றமசாட்டுகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாலேயே அது அழிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டார்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments