முள்ளிவாய்கால் முற்றத்தில் சுடர் ஏற்றி பாராளுமன்ற பயணத்தினை தொடங்கிவைத்தார் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள்!

முள்ளிவாய்கால் முற்றத்தில் சுடர் ஏற்றி பாராளுமன்ற பயணத்தினை தொடங்கிவைத்தார் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள்!

அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ்தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான முன்னால் முதலமைச்சரும் நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தனது அரசியல் பயணத்தினை 2009 ஆம் ஆண்டு இறுதி போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தவர்கள் நினைவாக முள்ளிவாய்க்காலில அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தி தனது அரசியல் பயணத்தினை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை சேர்ந்த நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கம்,சுரேஸ்பிரேமச்சந்திரன்,அனந்தி சசிதரன் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவு சிலைக்கு மலர்தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments