முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதைக் கண்டித்து பிரான்சில் நடைபெற்ற வாகனப் பேரணி!!

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதைக் கண்டித்து பிரான்சில் நடைபெற்ற வாகனப் பேரணி!!

வட தமிழீழம் , யாழ். பல்கலைக்கழக முற்றத்தில் அமைக்கப் பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு செய்யப்பட்டதைக் கண்டித்து பல்கலை மாணவர்களுக்கு ஆதரவாக பிரான்சு பாரிசில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழீழ மக்கள் பேரவை மற்றும் பிரான்சு தமிழ் இளையோர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமும் வாகனப்பேரணியும் உணர்வெழுச்சியோடு 12.01.2020 செவ்வாய்க்கிழமை அன்று கொட்டும்மழைக்கு மத்தியில் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் கொரோனா சட்டதிட்டங்களுக்கு அமைவாக மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

பிரெஞ்சுக் காவல்துறையினர் கொட்டும் மழைக்கு மத்தியிலும் குறித்த போராட்டங்களுக்கு பாதுகாப்பை வழங்கியிருந்தனர்.

தமிழர் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு பாலசுந்தரம் அவர்களும் தமிழீழ மக்ள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்களும் நிகழ்வில் உரைநிகழ்த்தினர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments