முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியொன்று கனடா பிரம்ப்டனில் அமைக்கப்படும்.- பற்றிக் பிரவுண்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியொன்று கனடா பிரம்ப்டனில் அமைக்கப்படும்.- பற்றிக் பிரவுண்

முள்ளிவாய்க்கால்  நினைவுத்தூபியொன்று கனடா பிரம்ப்டனில் அமைக்கப்படும்.- பற்றிக் பிரவுண்

தமிழர் தாயகத்தில் 08.01.2021 அன்று   யாழ் பல்கலையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தின் அழித்து இலங்கை அரசு  தமிழினப்படுகொலையைத்  தொடர்ந்து செயற்படுத்திவருகின்றது 
இங்கு பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்று பாசாங்கு செய்து வரலாற்றை மீண்டும்  எழுதவும் முயற்சித்து வருகிறது 

கனடாவில் அரசின்  அனுமதியுடன்  முள்ளிவாய்க்கால்  நினைவுச்சின்னத்தை உருவாக்க பிராம்ப்டன் நகர சபை ஒருமனதாக வாக்களித்தது. 
சிறிலங்கா அரசு தங்களது  இரத்தக் கறை படிந்த வரலாற்றை வெள்ளையடிக்கும்  முயற்சிக்கு  எதிராக கனடா  நடவடிக்கை எடுக்கும் தமிழ் இனப்படுகொலையை நாம் மறக்க மாட்டோம். பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் நினைவில் கொள்கிறோம்.என்று   பிரம்டன் மாநகர மேயர் திரு .பற்றிக் பிரவுண்  தனது முக நூலில் தெரிவித்துள்ளார் 

பகிர்ந்துகொள்ள