முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்றவர்களுக்கு விளக்கமறியல்!!

You are currently viewing முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்றவர்களுக்கு விளக்கமறியல்!!

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்தமைக்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உட்பட 10 பேரையும் எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே 18 ஆம் திகதி கிரான் கடற்கரையில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏற்பாட்டாளரான குருசுமுத்து வி.லவக்குமார் உட்பட 9 பேரும் கல்குடா பொலிசாரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனை நீதிபதி எம்.எச்.எம்.பசில் முன்னிலையில் இன்று பொலிசாரினால் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது சாட்சியங்களை கேட்டறிந்து கொண்ட நீதிபதி சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments