முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொலீஸ் பாதுகாப்பு நினைவு நிகழ்வு செய்ய தடை!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொலீஸ் பாதுகாப்பு நினைவு நிகழ்வு செய்ய தடை!


முல்லைத்தீவு மாவட்டத்தில் திலீபனின் நினைவு நிகழ்வு செய்ய  பொலீசார் தடைவித்துள்ளதுடன் தடை உத்தரவு பலபேருக்க அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
15.09.2020 தொடக்கம் 26.09.2020 வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் திலீபன் நினைவு நிகழ்வு நடத்துக்கூடாது என்று முல்லைத்தீவு பொலீசார் நீதிமன்றத்தில் தடைஉத்தரவு பெறப்பட்டு பலருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான வி.விக்னேஸ்வரன்,கஜேந்திரன்,கஜேந்திரகுமார்,மற்றும் து.ரவிகரன்,வர்த்தக சங்க தலைவர்கள் என பலரது பெயர்கள் குறிப்பிட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் தடைகட்டளை பெறப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
தடை உத்தரவு தொடர்பில் பொலீசார் விடுத்த கோரிக்கை பத்திரத்திற்க அமைவாக அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்பு தொடர்பில் எந்தவிதமான நிகழ்வுகளையோ கூட்டங்களையோ 15.09.200 தொடக்கம் 26.09.2020 வரை நடத்துவதற்கு 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவையின் 106 (1)  (3) பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளதாக நீதிபதியால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள