மூடப்படும் “Eurotunnel”! அவசரமாக கூடும் ஐரோப்பிய ஒன்றியம்!!

மூடப்படும் “Eurotunnel”! அவசரமாக கூடும் ஐரோப்பிய ஒன்றியம்!!
Schematic map of the Eurotunnel (Channel Tunnel). Vector.

பிரித்தானியாவில் அவதானிக்கப்பட்டுள்ள, பிறழ்வடைந்துள்ள “கொரோனா” வைரஸின் பரவல் அதிகமாக உள்ளதால், பிரித்தானியாவுடனான தனது எல்லையை மூடுவதற்கு பிரான்ஸ் தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக, பிரித்தானியா – பிரான்ஸ் இடையிலான, ஆங்கில கால்வாய்க்கு கீழால் செல்லும் சுரங்க பெரும்பாதையான “Eurotunnel” மூடப்படுவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இதேவேளை, பிரித்தானிய நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் அவசரமாக கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவுக்கான விமானசேவைகளை பல்வேறு நாடுகளும் நிறுத்தியுள்ள நிலையில், பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டு இன்று, 20.12.2020 நள்ளிரவு வரை தங்கள் தங்கள் நாடுகளில் தரையிறங்கும் விமானங்களில் பயணிக்கும் பயணிகளை கடுமையான “கொரோனா” சோதனைகளுக்கு உட்படுத்த ஏனைய ஐரோப்பிய நாடுகள் முடிவுசெய்துள்ளன.

பகிர்ந்துகொள்ள