மூடிய கதவுக்குள் 10 பேருடன் கூட்டம் நடத்திய சுமந்திரன்!

மூடிய கதவுக்குள் 10 பேருடன் கூட்டம் நடத்திய சுமந்திரன்!

த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்வதான அழைப்பு சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது.

பிரித்தானியாவின் New Molden, Kentan போன்ற இடங்களில் நடைபெற இருப்பதாகக் கூறப்பட்ட சந்திப்புக்கள் மக்களின் எதிர்ப்பை அடுத்து அங்கு இரத்து செய்யப்பட்டு, பின்னர் ஒரு மூடிய வீட்டுக்குள் 10 பேருடன் நடந்துள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் லன்டன் கிளையிடம் கேட்டபொழுது, இந்தச் சந்திப்பு தமது கிளையினால் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், தனிப்பட்ட இருவரினாலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of