மூட்டு வீக்கத்தினை தடுக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்!

மூட்டு வீக்கத்தினை தடுக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்!

மூட்டு வீக்கத்தினை ஏற்படுத்தும் சில பாதிப்பு உணவுகளை அறிந்தால் அதனை தவிர்ப்பதன் மூலம் நம் ஆரோக்கியத்தினை நாம் பாதுகாக்க முடியும். சர்க்கரை: அதிக சர்க்கரை என்றாலே பல் சொத்தை, உடல் எடை கூடுதல், வீக்கம், எடை கூடுவதால் ஏற்படும் ஒரு பாதிப்பாக சர்க்கரை நோய். உடலில் கெட்ட பாக்டீரியாக்களால் தாக்குதல்கள் ஏற்பட்டு வீக்கம் ஏற்படுகின்றன. செயற்கை இனிப்பை அவசியம் தவிர்க்க வேண்டும். பலருக்கு பால், பால் சார்ந்த உணவுகள் ஒத்துக் கொள்ளாது. இந்த அலர்ஜியால் வீக்கம் உண்டாக்கி வயிறு கோளாறு, மூச்சு வாங்குதல் போன்றவை ஏற்படலாம். தேங்காய் பால், பாதாம் பால் இவற்றினை வீட்டிலேயே தயாரித்து அளவான முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

* பதப்படுத்தப்பட்ட அசைவ உணவினை தவிர்ப்பது நல்லது.

* மது பழக்கம் கூடும்போது புற்று நோய் வரை கொண்டு சென்று விடும். மதுவினை அடியோடு தவிர்ப்பதே நல்லது.

* முழு தானிய உணவினை மட்டுமே உண்ண வேண்டும்.

* அதிகம் சுத்திகரிக்கப்பட்ட உப்பினை தவிர்க்க வேண்டும்.

* காய்கறி, பழங்கள், முழு தானிய உணவு, வேளைக்கு முறையான உணவு என்று கையாண்டால் ஆரோக்கியம் நம் கையில்.

சிலர் 60 வயதில் 40 வயது போல் தெளிவாய் இருப்பர். சிலர் 20 வயதில் 60 வயது போல் ஆரோக்கியமற்று, முதுமையாய் தோற்றமளிப்பர். இந்த கூடுதல் முதுமைக்கு காரணம் காலை முதல் இரவு வரை உள்ளது. காலையில் நாம் செய்ய வேண்டிய 20 நிமிட நடைபயிற்சியை விட்டு விடுவது முதல், இரவு தூங்குவதற்கு முன்பு கொறிக்கும் தவறான உணவு வரை நீண்ட பல காரணங்கள் உள்ளது. இது வெளித்தோற்றம், மறதி, மறதி நோய் என பல தாக்குதல்களை ஏற்படுத்தி விடுகின்றது.

* மது, புகை இவை மூளையையும், உடலையும் மிக கூடுதலாக பாதிக்கும்.

* மன உளைச்சலை ஒதுக்கி தானே சரியாகி விடும் என அதனுள்ளேயே மூழ்கி இருப்பது.

* கடும் வெய்யிலில் பாதுகாப்பின்றி சுற்றுவது.

* அதிக காபி குடிப்பது

* மிருதுவான தலையணை உறை இல்லாமல் சுரசுரப்பான உறையின் மீது உறங்குவது.

* கூன் போட்டு லேப்டப்பில் வேலை செய்வது.

* துரித உணவு எனப்படும் உணவுகளை சாப்பிடுவது.

* தேவைப்படும் போது வெய்யிலில் கறுப்பு கண்ணாடி அணியாது இருப்பது.

* அளவுக்கு மீறி உண்பது

* தன்னை அவ்வப்போது எடை மிஷினில் எடை பார்த்துக் கொள்ளாது இருப்பது.

* அதிக மேக்&அப்

* ஏதேனும் ஒரு பொழுது போக்கு பழக்கம் இல்லாது இருப்பது.

* தானியங்கி தூக்கியை உபயோகித்து படிகளில் ஏறாமல் இருப்பது போன்றவை வெளித் தோற்றத்திலும் மூளையின் உள்ளும் முதுமையைக் கூட்டி விடும்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments