மூத்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சாவடைந்துள்ளார்!

மூத்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சாவடைந்துள்ளார்!

எமது மூத்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சபேசன் அண்ணை இன்று 29-05-2020 வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு சாவடைந்தார் என்ற செய்தி கவலைகொள்ளச் செய்கிறது.

எமது விடுதலை போராட்டத்தின் மீதும் தலைமை மீதும் அளவற்ற பற்றோடு செயற்பட்ட சபேசன் அண்ணை, மிகவும் ஆக்கபூர்வமான அரசியல் விடுதலை போராட்டம் தொடர்பான கட்டுரைகளை எழுதி, அனைவர் மனத்திலும் இடம்பிடித்தவர்.

எமது மக்கள் சந்தித்த முள்ளிவாய்க்கால் பேரழிவால், மிகவும் மனமுடைந்துபோன அவர், அதனைத் தொடர்ந்த நாட்களில் அதன் பாதிப்புகளில் இருந்து மீளமுடியாதவராக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்.

மெல்பேர்ண் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் முன்னாள் பொறுப்பாளராகவும் பரப்புரை பொறுப்பாளராகவும் செயற்பட்டு, இன்று மீளாத்துயில் கொள்ளும் சபேசன் அண்ணையின் நினைவுகளுடன் இவரது இழப்பின் துயரால் வாடும் குடும்பத்தினருடன் எமது கரங்களை இறுக பற்றிக்கொள்கின்றோம்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments