மூன்று வாரங்களில் முதல் தொகுதி “கொரோனா” எதிர்ப்பு மருந்து! நோர்வே பொதுமக்கள் சுகாதார நிறுவனம் நம்பிக்கை!!

மூன்று வாரங்களில் முதல் தொகுதி “கொரோனா” எதிர்ப்பு மருந்து! நோர்வே பொதுமக்கள் சுகாதார நிறுவனம் நம்பிக்கை!!

எதிர்வரும் மூன்று வாரகாலத்தில் முதல்தொகுதி “கொரோனா” எதிர்ப்பு மருந்துகள் நோர்வேயில் பாவனைக்கு எடுக்கப்படலாமென, நோர்வே பொதுமக்கள் சுகாதார நிறுவனம் (FHI) நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேற்படி விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள FHI இன் இயக்குனர் “Geir Bukholm” தெரிவித்தபோது, திட்டப்படி முதல் தொகுதி எதிர்ப்பு மருந்துகள் கிடைக்கும்போது, எதிர்ப்பு மருந்துகள் அவசரமாக தேவைப்படுபவர்கள் முன்னிலை வழங்கப்படுவார்களென தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சுகாதாரத்துறை பணியாளர்கள், பொதுப்பணி சேவையாளர்கள் உள்ளிட்ட இன்றியமையாத துறைகளில் பணியாற்றுபவர்கள் மற்றும் இலகுவில் தொற்றால் பாரதூரமாக பாதிக்கப்படக்கூடியவர்கள் என்ற வரையறைக்குள் வரக்கூடிய மூதாளர்கள், மற்றும் திடமான உடல்நிலையை கொண்டிராதவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

70 டிகிரி உறைநிலையில் பாதுகாக்கப்பட்டு எடுத்துவரப்படவுள்ள இவ்வெதிர்ப்பு மருந்துகளை எதிர்வரும் டிசம்பர் முதலாம் நாள் பொறுப்பேற்றுக்கொள்ள தயாராக இருக்கும்படி முதற்கட்ட அறிவிப்பு கிடைக்கப்பற்றுள்ளதாகவும் FHI இன் இயக்குனர் “Geir Bukholm” குறிப்பிட்டுள்ளதும் பிரதானமானது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments