மேய்ச்சலுக்கு கட்டப்பட்ட இடத்திலேயே மாட்டை வெட்டி இறைச்சி போட்ட கும்பல்!

மேய்ச்சலுக்கு கட்டப்பட்ட இடத்திலேயே மாட்டை வெட்டி இறைச்சி போட்ட கும்பல்!

முல்லைத்தீவு உடையார்கட்டு- மேச்சலுக்காக கட்டிவிட்ட மாட்டினை கொலைசெய்து இறச்சியினை எடுத்து சென்ற நாசகார கும்பலின் சம்பம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது….

இச்சம்பவம் பற்றி தெரிவருகையில் உடையார் கட்டுகுளத்து வீதியில் அண்மைக்காலமாக பலரின் மாடுகள் சமூகவிரோதிகளால் இறச்சிக்காக வெட்டி கொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன….

கால்நடை வளர்ப்பவர்கள் மாடுகளை மேச்சலுக்காக வாய்க்கால் ஓரங்களில் கட்டிவிட்டுள்ளார்கள் இவ்வாறு கடந்த ”21.06.2020” அன்று கட்டிவிடப்பட்ட மாடு இறச்சிக்காக வெட்டப்பபட்டுள்ளது….

அன்று இரவு பசுமாடு கொலைசெய்யப்பட்டு மாட்டின் ஒருபகுதி இறைச்சி ஈரல்கள் எடுக்கப்பட்டு உடையார் கட்டு குளக்கட்டு ஊடாக தேராவில் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கால்நடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்….

இவ்வாறான நாசகார கும்பல் ஒன்று செயற்பட்டு வருகின்றமையினால் உடையார் கட்டு தெற்குபகதியில் கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளை வளர்க்கமுடியாத நிலை காணப்படுவதாக கவலை தெரிவித்துள்ளார்கள் குறித்த சில காலப்பகுதியில் இவ்வாறு மூன்று மாடுகள் வெட்டப்பட்டுள்ள பொலீசாரிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை…

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments