மேய்ச்சல் காணி அபகரிப்பு- கைவிரித்தார் கிழக்கு ஆளுநர்!

மேய்ச்சல் காணி அபகரிப்பு- கைவிரித்தார் கிழக்கு ஆளுநர்!

ன அடிப்படையில், காணி எல்லைகளை வரையறுப்பது, அரசாங்கத்தினதோ அல்லது தனதோ கொள்கையல்லவெனத் தெரிவித்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், சிங்களவர்களுக்கோ தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ என, காணிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கங்களுக்காக இதுபோன்ற ஒதுக்கீடுகள் செய்யக்கூடாது என்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில், நேற்று இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, தொடர்ந்துரைத்துள்ள அவர், காணி ஒதுக்கீடு மற்றும் கையகப்படுத்தல் என்பது, தனது சொந்த விடயமல்ல என்றும் அவ்வாறான செயற்பாடுகளில் தான் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளார்.

கால்நடைகளின் மேய்ச்சலுக்காகப் பயன்படுத்தப்படும் நிலங்களை, விவசாயிகளுக்கு வழங்குவதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கூட்டமைப்பின் எம்.பிக்கள், ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள அவர், இனக் குழுக்களை இலக்காகக் கொண்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, ஒருபோதும் தான் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் மாகாணத்திலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் சமமாகச் சேவை செய்வதில், தான் உறுதியாக இருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

மேலும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, அனைத்துத் தரப்பினருடனும் ஒரு சிறப்புக் கலந்துரையாடலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. செல்வராஜ், மட்டக்களப்பு மேயர் டி.சரவணபவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments