மேலும் இரண்டு கொரோனா அலைகள் ; எதிர்பார்க்கும் நிபுணர் குழு!

மேலும் இரண்டு கொரோனா அலைகள் ;  எதிர்பார்க்கும் நிபுணர் குழு!

கொரோனா மையம் மீண்டும் கட்டப்படும் என்று ஜெர்மன் மற்றும் இத்தாலிய சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். அநேகமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது பாதிப்பு அலைகள் வர வாய்ப்புண்டு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இது ஒரு தொற்றுநோய். ஒரு தொற்று நோயில், வைரஸ் மக்கள் தொகையில் 60-70 விழுக்காடுவரை பரவுகின்றது. என்று ஜெர்மன் Robert Koch நிறுவனத்தின் தலைவர் ‘Lothar Wieler‘ கூறியுள்ளார்.

Wieler கூற்றுப்படி, “கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக மீண்டும் தாக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நோய்த்தொற்று கட்டுப்பாட்டு நிபுணர்களிடையே நிலவும் பார்வை இது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மூன்றாவது அலையும் வரும் என எதிர்பார்ப்பதாயும் அவர் கூறியுள்ளார்.

நாடுகள் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதால், இப்போது நாம் மீண்டும் தொற்று அலையைக் காண்போம் என்று இத்தாலிய நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.

தொற்றுநோய்க்கான புதிய அறிகுறிகளை அடையாளம் காணவும், கண்காணிக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் யாருடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதைக் கண்டறியவும் அதிகாரிகள் தங்கள் முயற்சிகளை மேலும் முடுக்கிவிடவேண்டும் என்று எதிர்பார்ப்பதாயும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

தொற்றை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான திறவுகோலாக பாதிக்கப்பட்டவர்களை ஆரம்பத்திலேயே தனிமைப்படுத்தல், அதிக சோதனை மற்றும் நெருங்கியவர்களின் தனிமைப்படுத்தல் போன்றவை அமையும் என்றும், மேலும் புதிய தொற்றுநோய்களை கண்காணிக்க மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்கு தேவையான வளங்களுக்கான பெரும் முதலீடு அவசியம் என்றும் இத்தாலிய உயர் சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் ‘Silvio Brusaferro’ தெரிவித்துள்ளார்.

தொற்று கண்காணிப்பு செயலிகள் போன்ற தொழில்நுட்ப தீர்வுகள் உதவக்கூடும்.. ஆனால், அது கண்காணிப்பு மற்றும் மனித தலையீட்டை ஈடுசெய்யக்கூடியதல்ல என்று அவர் மேலும் கூறியுள்ளார். (NTB)

பகிர்ந்துகொள்ள