மொட்டுக்கு மாவீரர் பெயரால் பிரச்சாரம்!

மொட்டுக்கு மாவீரர் பெயரால் பிரச்சாரம்!

2009 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து மனிதப்பிணம் உண்டு மகிழ்ந்த  அரக்கர்கள் அரசியல் கட்சியில் ஒட்டி வாழும் ஒட்டுண்ணி ஒருவர் மாவீரர் துயிலும் இல்லத்தின் பெயிரில் இயங்கும் முகநூல் வழி அரக்கர் கட்சிக்கு வாக்கு பிச்சை கேட்பது மக்கள் மத்தியில் விசனத்தை உருவாக்கியுள்ளது.

வன்னித்தேர்தல் மாவட்டத்தில் மொட்டுக்கட்சி சார்பில் போட்டியிடும் சதாசிவம் கனகரத்தினம் என்பவரும் அவரின் ஆதரவாளர்களுமே இந்த ஈனச்செயலை செய்து வருவதாக தெரியவருகின்றது.

2009 இற்கு முன்பு தமிழ்த் தேசியவாதியாக முகமூடியணிந்த இவர் 2009 இற்கு பிற்பாடு எம்மினத்தை அழித்த கட்சியோடு இணைந்து பணத்திற்காகவும் பதவி ஆசைக்காகவும் தமிழ்மக்களின் தியாகவிடுதலைப்போராட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருவதோடு காட்டிக்கொடுத்த ஒரு அரசியல் வாதி என்பது குறிப்பிடத்தக்கது.

4.5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments