மோர்டென்ஸ்ரூட்டில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம் ஒருவர் கைது!

You are currently viewing மோர்டென்ஸ்ரூட்டில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம் ஒருவர் கைது!

மோர்டென்ஸ்ரூட்டில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம் ஒருவர் கைது!

மோர்டென்ஸ்ரூட் பகுதியில் கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து அதிகளவிலான காவல்த்துறை ரோந்து வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

இரவு 11 மணியளவில், பல கத்திக்குத்துக் காயங்களுடன் ஒருவர் தரையில் படுகாயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். சம்பவ இடத்திலேயே அவருக்கு உயிர்காக்கும் முதலுதவி வழங்கப்பட்டது.

இரவு 11.49 மணியளவில், கத்தியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபர்கள் எவரையும் காவல்த்துறையினர் தேடவில்லை என விசாரணைத் தலைவர் Monica Engebretsen,  தெரிவித்துள்ளார்.

மோர்டென்ஸ்ரூட் சென்டருக்கு வெளியே உள்ள பகுதியொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு, பொதுமக்கள் அப்பகுதிக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் முதலுதவி உபகரணங்கள், இரத்தம் படிந்த காகிதங்கள் மற்றும் இரத்தக் கறைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல காவல்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் தீவிரமாக விசாரணைப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்த நபர் உயீர் காக்கும் ஊர்தி மூலம் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் மருத்துவ அவசர சேவைகள் சம்பவ இடத்தை வந்தடைந்தபோது சுயநினைவுடன் இருந்தார்.

“காயங்கள் கடுமையானவை எனத் தோன்றுகின்றன” என காவல்த்துறை நடவடிக்கை அதிகாரி Vidar Pedersen தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply