யாழில் அரச பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்!

யாழில் அரச பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமம் இராமாவில் பகுதியில் அரச பேருந்து மீது  மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் கல்லெறிந்ததில்  இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் 17/7/2020 வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணியளவில் இராமாவில் முருகன் ஆலயத்திற்கும் புத்தூர்ச்சந்தி சாவகச்சேரி கமலநலசேவை நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இடம் பெற்றுள்ளது

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மீது ஏ-9 வீதியில் நின்ற இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதில் பேருந்தின் நடத்துநரும் பயணி ஒருவரும் காயமடைந்த நிலையில் 1990 அவசர அம்புலன்ஸ் மூலம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments