யாழில் இணையவழி பாலியல் இம்சை தொடர்பான முறைப்பாட்டினை ஏற்க மறுத்த பொலிசார்!

யாழில் இணையவழி பாலியல் இம்சை தொடர்பான முறைப்பாட்டினை ஏற்க மறுத்த பொலிசார்!

யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பீடத்தில் இடம்பெற்ற இணையவழி பாலியல் இம்சைகள் குறித்த முறைப்பாட்டை பதிவு செய்ய சென்றபோது கோப்பாய் பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளனர். 

இந்நிலையில் இணையவழி பாலியல் இம்சையில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் இருவர் பொலிஸாரின் பிள்ளைகள் என்பதனாலேயே முறைப்பாட்டை ஏற்க தயங்கினரா?

என்ற கோணத்திலும் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றது. முகாமைத்துவ பீடத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் இம்சைகள் தொடர்பில் மானியங்கள் ஆணைக்குழுவின் 

அறிவுறுத்தலுக்கு அமைவாக பல்கலைகழகத்தினால் துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த விசாரணைகளில் தென்னிலங்கையை சேர்ந்த இரு ஆண் மாணவர்களும், இரு பெண் மாணவிகளும்

அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு பல்கலைகழக நிர்வாகம் தீர்மானித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றிருந்தது. 

எனினும் கோப்பாய் பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளனர். இதனையடுத்து குறித்த விடயம் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபருக்கு தொியப்படுத்தப்பட்ட நிலையில்

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்.பல்கலைகழகத்திற்கு நோில் சென்று முறைப்பாட்டை பதிவு செய்திருக்கின்றார். 

இந்நிலையில் அடையாளம் காணப்பட்ட 4 மாணவர்களில் இரு மாணவர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் பிள்ளைகள் என தொியவந்துள்ளது. அதற்காகவா குறித்த மாணவர்கள் மீதான முறைப்பாட்டை 

கோப்பாய் பொலிஸார் ஏற்கமறுத்தனர்? என்ற கோணத்தில் புலனாய்வு பிரிவு தனியான விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments