யாழில் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர் கொரோனாவினால் உயிரிழப்பு!!

You are currently viewing யாழில் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர் கொரோனாவினால் உயிரிழப்பு!!

கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலியைச் சேர்ந்த ராஜா ரமேஸ்குமாரன் (வயது – 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர், சுயநினைவற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவருக்கு இன்று ஒரே நாளில் இரு தடவைகள் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

சுமார் 66 வயது வயோதிப பெண்ணுக்கு இரு கையிலும் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments