யாழில் இருந்து இந்தியா சென்றுவந்த நபரால் பரபரப்பு!

யாழில் இருந்து இந்தியா சென்றுவந்த நபரால் பரபரப்பு!

சட்டவிரோதமான முறையில் அக்கரை கடற்பகுதியில் இருந்து இந்தியாவிற்கு சென்று திரும்பிய நபரை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

வளலாய் பகுதியினை சேர்நத 34 வயதுடைய நபரே தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர் ஆவார். குறித்த நபர் நேற்றுமுன்தினம் இந்தியாவிற்கு படகு மூலம் சென்றுள்ளார்..

இன்று அக்கரை கடற்பகுதிக்கு வந்து இறங்கிய போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். குறித்த நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்திய போது நீதிவான் ஏ.ஆனந்தராஜா தனிமைப்படுத்த நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டதுடன் பீ.சீ.ஆர் பரிசோதணைக்கு உட்படுத்தவும் கட்டளை வழங்கினார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments