யாழில் இளைஞன் கடத்தப்பட்டு வெட்டுகாயங்களுடன் மீட்பு!

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு வெட்டுகாயங்களுடன் மீட்பு!

வேலைக்கு சென்றுவிட்டு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞனை வழிமறித்த வாள்வெட்டு குழு ரவுடிகள் குழு கடத்தி சென்று சரமாரியாக வாளால் வெட்டி வீதியில் தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளது. இந்நிலையில் படுகாயமடைந்து மயங்கிய நிலையில் இளைஞன் மீட்கப்பட்டு மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 

குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு 7 மணியளவில் சம்பவத்தில் முன்னாள் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஆ.சாந்தகுமாரின் மகனான சாந்தகுமார் சதுசன் (20-வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளார். மேசன் வேலைக்கு செல்லும் குறித்த இளைஞன் வேலை முடிந்து பேருந்தில் வரும் போது வரணி சுட்டிபுரம் அம்மன் ஆலயப்பகுதியில் 

பேருந்தை வழிமறித்த இளைஞர்கள் ஐந்து பேர் கொண்ட வாள்வெட்டு குழு ரவுடிகள் குறித்த இளைஞனை பேருந்திலிருந்து இறக்கி  இழுத்து சென்று வாளால் வெட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கைவிரல் இரண்டு துண்டாடப்பட்ட நிலையில், வலக் காலிலும் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் மந்துவிலுக்கு செல்லும் பாரதி வீதி சந்தியில் 

இளைஞனை போட்டுவிட்டு குறித்த ரவுடி குழு தப்பிச் சென்றுள்ளது.சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments