யாழில் கடந்த 6 மாதங்களில் 7 லட்சத்து 42 ஆயிரம் லீட்டர் பியர் நுகர்வு!

யாழில் கடந்த 6 மாதங்களில் 7 லட்சத்து 42 ஆயிரம் லீட்டர் பியர் நுகர்வு!

யாழ்ப்பாண மதுவரித் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம், நல்லூர்,வேலணை ஆகிய பகுதிகளில் கடந்த 2019 ம் ஆண்டுடன் ஒப்பிட்டு இவ்வருடம் கடந்த ஆறு மாதம் வரையிலான புள்ளி விபரங்கள் வெளியானது.

அதனடிப்படையில் பியர் நுகர்வு 27% மாக குறைவடைந்துள்ளதாக யாழ்ப்பாண மதுவரி திணைக்கள புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019ம் ஆண்டு 21 லட்சத்துக்கு மேற்பட்ட லீட்டர் பியர் விற்பனை இடம்பெற்றுள்ளது.

எனினும் இவ்வருடம் கடந்த ஆறு மாத புள்ளி விவரங்களின்படி 7 லட்சத்து 42 ஆயிரம் லீட்டர் பியர் நுகர்வு மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் யாழ்ப்பாண மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு வைன் நுகர்வு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 21 வீதத்தால் குறைவடைந்துள்ளதோடு அதேபோல் வெளிநாட்டு சாராய நுகர்வும் 1.74 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.

உள்ளூர் சாராய பாவனை 2.6 வீதமாக அதிகரித்துள்ளது.

மேலும் யாழ்ப்பாணம், நல்லூர், வேலணை ஆகிய பகுதிகளில் யாழ்ப்பாண மதுவரித் திணைக்களத்தின் ஆளுகையின் கீழ் 13 சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் 5 ஹோட்டல் விற்பனை நிலையங்களும் 6 ரெஸ்டூரண்ட் விற்பனை நிலையங்களும் காணப்படுகிறது.

எனினும் கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது இவ்வருடத்தில் கடந்த ஆறு மாதம் வரையிலான புள்ளிவிபரங்களின்படி பியர் பாவனை குறைவடைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. .

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments