யாழில் காச்சலால் இரு குடும்ப தலைவர்கள் உயிரிழப்பு!

You are currently viewing யாழில் காச்சலால் இரு குடும்ப தலைவர்கள் உயிரிழப்பு!

ஊர்காவற்துறையை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்

அந்தோனி யேசுதாஸ் 61 வயதுடைய ஊர்காவற்துறைச்சேர்ந்த 3 பிள்ளையின் தந்தையே நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்

இவர் கடந்த
7 நாட்களாக காய்ச்சலுக்கு மருந்து எடுத்திருந்த நிலையில்
வீட்டில் மயங்கி விழுந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது மரணவிசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர்மரணவிசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் நிமோனியா காய்ச்சலால் இறந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேவேளை

யாழில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்.வரணி வடக்கை சேர்ந்த கிட்டினன் தங்கலிங்கம் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 27ம் திகதி வீட்டு மேசையில் இருந்த அம்மிக் குளவி அவரின் காலில் விழுந்துள்ளது.

இதனையடுத்து 2 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.   

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments