யாழில் காணொளி பதிவை வைத்து மாணவியை மிரட்டிய இருவர் கைது!

You are currently viewing யாழில் காணொளி பதிவை வைத்து மாணவியை மிரட்டிய இருவர் கைது!

யாழில் காணொளி பதிவை வைத்து மாணவியை மிரட்டி பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறீலங்கா காவற்துறையால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்களே இவ்வாறு சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலிகாமம் வவலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பயிலும் 15 வயது மாணவியுடன் இளைஞன் ஒருவன் காணொளியில் உரையாடலை சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்டுள்ளான்.

மாணவி துவாயுடன் இருக்கும் அந்த உரையாடலை குறித்த இளைஞன் பதிவு செய்துள்ளான். பதிவு செய்த அந்த உரையாடலை தனது உறவினரான இன்னொரு இளைஞனுக்கும் அனுப்பியுள்ளான்.

அவ்வாறு கிடைத்த அந்த வீடியோ பதிவை ஏனையோருக்கும் அனுப்ப உள்ளதாக மிரட்டி மாணவியை அந்த இளைஞன் துஷ்ப்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளான். அதேவேளை, இந்த வீடியோ பதிவு பல இடங்களிலும் பகிரப்பட்டுள்ளது.

மாணவி கல்வி கற்கும் பாடசாலை சமூகத்திற்கு இந்த விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து ஆசிரியர்களால் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் ஊடாக காவல் நிலையத்துக்கு இது குறித்து தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து வீடியோவை பதிவு செய்த இளைஞனுக்கும், அதனை பயன்படுத்தி மாணவியை பாலியல் துஷ்ப்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனையும் சுன்னாகம் சிறீலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments