யாழில் காவல்துறையினர் மூவர் தனிமைப்படுத்தல் மக்கள் அச்சத்தில்!

யாழில் காவல்துறையினர் மூவர் தனிமைப்படுத்தல் மக்கள் அச்சத்தில்!

கொரோனா சந்தேகம் காரணமாக யாழ்.கோப்பாய் காவல்துறை நிலையத்தில் கடமையாற்றும் 3 காவல்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்துவந்த நபரை சந்தித்ததற்காகவே 3 அதிகாரிகளும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலக்குட்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கோப்பாய் பிரிவுக்குட்பட்ட கோப்பாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அண்மையில் வெலிக்கடைச் சிறையில் இருந்து விடுதலையாகி 

சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவருடன் வெலிக்கடை சிறையில் இருந்த சந்தேக நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வந்த குறித்த நபர் 

மீண்டும் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட நபரை ஏற்றிச்சென்ற கோப்பாய் காவல்துறை நிலையத்தைச் சேர்ந்த மூன்று உத்தியோகத்தர்களே மீண்டும் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட நபரை ஏற்றிச்சென்ற கோப்பாய் காவல்துறை நிலையத்தைச் சேர்ந்த மூன்று உத்தியோகத்தர்களே  இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments