யாழில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை 19 ஆடுகளை கடித்து குதறியது!

யாழில்  கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை 19 ஆடுகளை கடித்து குதறியது!

யாழ்.தெல்லிப்பழை – மாவைகலட்டி கிராமத்திற்குள் புகுந்து சிறுத்தை புலி ஒன்று வீடொன்றிலிருந்த 13 ஆடுகளை கடித்து காயப்படுத்தியுள்ளதுடன், 6 ஆடுகளை கொன்றுள்ளது. 

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. கிராமத்திற்குள் புகுந்த புலி வீட்டில் பட்டியிடப்பட்டு கட்டப்பட்டிருந்த 19 ஆடுகளை கடித்து குதறியுள்ளது. 

இதில் 13 ஆடுகள் காயமடைந்ததுடன், 6 ஆடுகளை கொன்றிருக்கின்றது. குறித்த சிறுத்தை புலி எவ்வாறு அப்பகுதிக்கு வந்தது என்பது தொடர்பில் மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், 

குறித்த புலியை அந்த சூழலில் உள்ள யாராவது வளர்க்கிறார்களா? என சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments