யாழில் குத்துக்கரணம் அடித்த தீயணைப்பு வாகனம் ஒருவர் பலி இரவர் காயம்!

யாழில் குத்துக்கரணம் அடித்த தீயணைப்பு வாகனம் ஒருவர் பலி இரவர் காயம்!

யாழ்.நீர்வேலி விபத்தில் தீ அணைப்பு பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 

யாழ். மாநகர சபையின் தீ அணைப்பு வாகனத்தின் முன் ரயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து மூன்றுமுறை குத்துக்கரணம் அடித்து அருகில் உள்ள காணிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் சற்று முன்னர் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.தீ அணைப்பு வாகனத்தில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வாகனம் கடும் வேகமாக பருத்தித்துறைபக்கமாக சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments