யாழில் குளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

You are currently viewing யாழில் குளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ். சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குட்பட்ட அரியாலை நாயன்மார்கட்டு குளத்தில் இருந்து பெண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் குளத்தில் இருந்து மிதந்து கரையை அடைந்துள்ள நிலையில் ஊர் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் சடலமாக காணப்படுவது யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இது குறித்து யாழ்ப்பாணம் சிறீலங்கா காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சிறீலங்கா காவற்துறையினர் சடலத்தை அடையாளம் காண்பது தொடர்பாகவும் மரணத்திற்கான காரணம் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை

யாழ். தென்மராட்சி, சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம்   (17.01.2023) பதிவாகியுள்ளது.

62 வயதுடைய மயில்வாகனம் கஜேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் தனித்து வசித்து வந்த நிலையில் அவரை கடந்த 14ஆம் திகதி இரவு வரை சாவகச்சேரி நகரப் பகுதியில் காணப்பெற்றதாக பலர் தெரிவித்துள்ளனர்.

குளிக்கச் சென்ற வேளையில் தவறி கிணற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

கிணற்றில் மூழ்கிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த அயலவர்கள் சாவகச்சேரி  சிறீலங்கா காவற்துறை நிலையத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments