யாழில் கைக்குண்டுடன் ஒருவர் கைது!

யாழில் கைக்குண்டுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – பரந்தன் பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கை குண்டுடன் கைது செய்யப்பட்டிருப்பதாக யாழ்.பொலிஸார் தொிவித்துள்ளனர். 

22வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளுடன் குறித்த நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுள்ளதை அவதானித்த பொலிஸார் 

அவரை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது அவரது உடமையில் இருந்து கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதுடன். 

அவர் உடனடியாகவே கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments