யாழில் கொரோனா சந்தேக நபர்களை ஏற்றிவந்த அம்புயூலன்ஸ் விபத்து!

யாழில் கொரோனா சந்தேக நபர்களை ஏற்றிவந்த அம்புயூலன்ஸ்  விபத்து!

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற அம்பியூலஸ் வண்டி டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்.தென்மராட்சி A9 வீதி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றது.

இரணைமடு விமானப்படையின் தனிமைப்படுத்தப் முகாமிலிருந்து கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மூவரை அழைத்து வந்த அம்பியூலஸ் வண்டியும், டிப்பர் வாகனமுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியிருந்தன.

இதன்போது உயிர் சேதமோ காயங்களோ ஏற்பட்டிருக்கவில்லை. அதனையடுத்து கொரோனா தொற்று சந்தேக நபர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அம்பியூலஸ் வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments